Advertisment

‘மாமனிதன்’ பட அப்டேட்... உற்சாகத்தில் ரசிகர்கள்!

vijay sethupathi

சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமனிதன்'. இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். இது, விஜய் சேதுபதி மற்றும் சீனு ராமசாமி கூட்டணியில் உருவான மூன்றாவது படமாகும்.

Advertisment

இப்படத்தின் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்னரே நிறைவடைந்தும், தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் ரிலீஸ் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில், ‘மாமனிதன்’ படத்தின் அப்டேட்டை இயக்குநர் சீனு ராமசாமி தற்போது வெளியிட்டுள்ளார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="04114e41-03b6-4561-a97f-bac6912f8730" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside_3.png" />

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "'மாமனிதன்' தலைப்பு ஏற்கனவே தயாரிப்பாளர் ஜெயசீலன் என்பவரிடம் இருந்தது. அதை, முறைப்படி யுவன்சங்கர்ராஜா இரண்டு நாட்களுக்கு முன்பு பெற்றார். ஆகவே, ‘மாமனிதன்’ படத்தின் தலைப்பு எங்கள் படத்திற்கு உறுதியானது. தலைப்பு பெற்றதால் முதல் பார்வை, பாடல் விரைவில்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக இப்படத்தைத் திரையில் காணும் ஆவலோடு இருந்த ரசிகர்கள், சீனு ராமசாமியின் ட்வீட்டைக் கண்டு உற்சாகமடைந்துள்ளனர்.

seenu ramasamy actor vijay sethupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe