Advertisment

''படத்தின்  ரிலீஸ் தேதி குறித்து அவர்தான் சொல்லவேண்டும்'' - சீனு ராமசாமி விளக்கம்!

hd

சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணியில் நான்காவது படமாக உருவாகும் ‘மாமனிதன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் கரோனா தளர்வுக்கு பிறகு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisment

விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிக்கும் இப்படத்தில் காயத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும் படத்திற்கு இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என மூன்று பேரும் இணைந்து இசையமைத்து வரும் நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்து இயக்குனர் சீனு ராமசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்... ''மாமனிதன் திரைப்படத்தில் நான்கு பாடல்களையும் ரீ-ரிகார்டிங்கையும் (RR)இசைஞானி இளையராஜா முடித்து விட்டார், திரு.யுவன் சங்கர் ராஜா பாடலுக்கு ஒழுங்கு (Arrangement)செய்துகொண்டிருக்கிறார் மற்றபடி வெளியீடு எப்போது என்பது தயாரிப்பாளர்கள் தான் சொல்ல வேண்டும். எனக்கு அதில் அதிகாரமில்லை'' என விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

Vijay Sethupathi maamanidhan seenu ramasamy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe