Skip to main content

''படத்தின்  ரிலீஸ் தேதி குறித்து அவர்தான் சொல்லவேண்டும்'' - சீனு ராமசாமி விளக்கம்!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020

 

hd

 

சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணியில் நான்காவது படமாக உருவாகும் ‘மாமனிதன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் கரோனா தளர்வுக்கு பிறகு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 


விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிக்கும் இப்படத்தில் காயத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும் படத்திற்கு இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என மூன்று பேரும் இணைந்து இசையமைத்து வரும் நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்து இயக்குனர் சீனு ராமசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்... ''மாமனிதன் திரைப்படத்தில் நான்கு பாடல்களையும் ரீ-ரிகார்டிங்கையும் (RR) இசைஞானி இளையராஜா முடித்து விட்டார், திரு.யுவன் சங்கர் ராஜா பாடலுக்கு  ஒழுங்கு (Arrangement) செய்துகொண்டிருக்கிறார் மற்றபடி வெளியீடு எப்போது என்பது தயாரிப்பாளர்கள் தான் சொல்ல வேண்டும். எனக்கு அதில் அதிகாரமில்லை'' என விளக்கம் அளித்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘தேரு போல அசஞ்சு வந்தவளே...’ - குத்தாட்டம் போடும் ஜி.வி. பிரகாஷ்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Idimuzhakkam first single released

ஜி.வி. பிரகாஷ் நடிகராக இடி முழக்கம், 13, கள்வன், டியர், கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக தங்கலான், அமரன், சூர்யாவின் 43வது படம் என ஏகப்பட்ட படங்களில் பணியாற்றுகிறார். 

இதில் சீனு ராமசாமி இயக்கத்தில் இடி முழக்கம் உருவாகி வருகிறது. கலைமகன் முபாரக் தயாரிக்கும் இப்படத்தில் காயத்ரி, கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். என்.ஆர். ரகுநந்தன் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் கடந்த மாதம் நடந்த பூனே சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரிவில் திரையிடப்பட்டது. 

இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடலாக  ‘அடி தேனி சந்தையில்...’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி இப்பாடலைத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வரதன் எழுதியுள்ள இப்பாடலை அந்தோனி தாசன் மற்றும் மீனாட்சி இளையராஜா இணைந்து பாடியுள்ளனர். திருவிழாவில் நடக்கும் குத்து பாடலாக இப்பாடல் அமைந்துள்ள நிலையில், பாடலுக்கேற்ற குத்தாட்டம் போட்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.

Next Story

‘காதலே காதலே...’ - ‘96’ பட ரசிகர்களுக்கு குட் நியூஸ்

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
vijay sethupathi trisha 96 movie re released

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் 96. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படமும் காதலர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்பட்டது. மேலும் விமர்சன ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது. 

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது. அதன் பிறகு தற்போது வரை எந்த அப்டேட்டும் வரவில்லை. இந்த நிலையில் இப்படம் தற்போது ரீ ரிலீஸாகவுள்ளது. காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழக அளவில் இப்படம் ரீ ரிலீஸாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் இப்பட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.