Advertisment

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகிறது 'இடம் பொருள் ஏவல்'!

csc

திருப்பதி பிரதர்ஸ் சார்பாக இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில், விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா ஸ்வேதா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து நடித்து, தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான படம் 'இடம் பொருள் ஏவல்'.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து வெளியீட்டுக்குத்தயாராகி நீண்ட வருடங்கள் ஆன நிலையில் இப்படம் கரோனா நெருக்கடி முடிந்தவுடன் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்து தற்போது இயக்குனர் சீனு ராமசாமி ட்வீட் செய்துள்ளார். அதில்.. ''சூதர்மனைதனில் உருவப்படும் சேலையைப் பற்றாமல் தன் இரண்டு கைகளையும் உயர்த்திக் "கிருஷ்ணா கிருஷ்ணா" எனப் பதறிய திரவுபதியின் மனநிலையில் சிக்குண்ட எமக்கு ஆறுதல். இது திரைப்படந்தான் ஆனால் எனக்கு பிள்ளை, இயக்குநர் திரு,லிங்குசாமிக்கு நன்றி. 'இடம் பொருள் ஏவல்'வெளியீடு" எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisment

Idam Porul Yeval seenu ramasamy Vijay Sethupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe