Advertisment

"அவர் நட்சத்திரங்கள் பலர் வாழ்வில் விளக்கேற்றி காத்தவர்!" - சீனுராமசாமி புகழாரம்!

gewg

Advertisment

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்' படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ராதிகா. அதன் பின்னர் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் அதன் பிறகு சின்னத்திரையில் கால் பதித்து இன்று வரை கோலோச்சி வருகிறார். இந்நிலையில் அவர் திரையுலகிற்கு அறிமுகமாகி 42 ஆண்டுகள் ஆகின்றன. இதனை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் ராதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இயக்குனர் சீனுராமசாமி நடிகை ராதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...

"மெய்வருத்தம் பார்க்காது

இமைபொழுதும் கண்துஞ்சாது கடமையே கண்ணான

திருமதி ராதிகா அவர்கள்...

நட்சத்திரங்கள் பலர் வாழ்வில் விளக்கேற்றிக் காத்தவர்.

கலை தொழிலாளர்

வீடுகளில் மூத்தமகள்.

எங்கும் எதிலும்

முதன்மை நாயகி.

தொடரட்டும்

பெருமைமிகு

பயணம் Folded hands

#42yearsofRadikaSarathkumar" என பதிவிட்டுள்ளார்.

radhika seenu ramasamy
இதையும் படியுங்கள்
Subscribe