Advertisment

முதல் நாள் வசூலில் 'சீமராஜா' நிகழ்த்திய சாதனை!

sivakarthikeyan

Advertisment

சிவகார்த்திகேயன் - சமந்தா ஜோடியாக நடித்து, பொன்ராம் இயக்கத்தில் உருவான 'சீமராஜா' திரைப்படம் நேற்று உலகமெங்கும் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது. இது சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் முதல் நாள் வசூலை காட்டிலும் அதிகமாக ரூ.13.5 கோடி வசூலானதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து பட தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா பேசும்போது...

"இந்த வெற்றிக்கு காரணமானசிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ஒரு ஜனரஞ்சகமான படத்துக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் நிறைத்து ஒரு படத்தை தயாரிப்பது என்பது, அனைத்து மக்களையும் சென்று அடைய வேண்டும் என்ற எண்ணத்தில்தான்.குடும்பமாக படம் பார்க்கும் ரசிகர்களையும், இளைஞர்களையும் கவர வேண்டும் என்பதே பிரதான நோக்கம். சிவகார்த்திகேயன் நிறைய வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்று நிலையை தாண்டி, அவரது ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு கலகலப்பான படமாக 'சீமராஜா' படத்தை கொடுத்துள்ளார். முதல் நாளே திரையரங்குகளுக்கு குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வருகிறார்கள் என்று திரை அரங்கு உரிமையாளர்கள் கூறும் போது உள்ளம் பூரிப்பு அடைகிறது. சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் வசூல் சாதனையை இந்த படம் முறியடிக்கும் என்பதில் எந்த வித ஐயம் இல்லை. முதல் நாள் வசூலே 13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது. இதுவரை 550 காட்சிகள் திரையிடபட்டு உள்ளன. இந்த எண்ணிக்கை இந்த வார இறுதிக்குள் மேலும் கூடும். ஊடக நண்பர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும், பொது மக்களுக்கும், இந்த மாபெரும் வெற்றிக்கு என் மனமார்ந்த நன்றிகள்" என்றார்.

sivakarthikeyan seemaraja
இதையும் படியுங்கள்
Subscribe