"தமிழ்மொழி மீது அளப்பெரும் பற்று கொண்ட பெருந்தமிழர்" - சிவகுமாருக்கு சீமான் வாழ்த்து

seeman wishes veteran actor sivakumar

தமிழ் சினிமாவில் 1965ஆம் ஆண்டு தனது திரைப்பயணத்தை தொடங்கி, கிட்டத்தட்ட 190 படங்களுக்கு மேலாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் சிவகுமார். அவர் நடித்த காலகட்டத்தில் எந்தவொரு சர்ச்சைக்கும் சிக்காத ஒரு நடிகர் என்ற பெயர் அவருக்கு உண்டு. 2001க்கு மேல் பெரிய திரையிலிருந்து விலகிய சிவகுமார் கம்பராமாயணம் குறித்த ஆய்வில் இறங்கி தற்போது வரை அதனை சொற்பொழிவாற்றி வருகிறார்.

மேலும் தனது 100வது படம் வெளியானபோது 'ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை' ஆரம்பித்து ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கி வருகிறார். இந்நிலையில் நடிகர் சிவகுமார், இன்று (27.10.2022) தனது 81வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். இதனை முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவகுமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "திரையுலகின் மார்க்கண்டேயன், தனித்துவமிக்க நடிப்பாற்றலாலும், தனிப்பட்ட குணநலனாலும் மக்களின் மனங்கவர்ந்த மூத்த திரைக்கலைஞர். தமிழ்மொழி மீது அளப்பெரும் பற்றும், புலமையும் கொண்ட பெருந்தமிழர். அன்பிற்கினிய அண்ணன் சிவக்குமார் அவர்களுக்கு எனது உளம்நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

actor sivakumar seeman
இதையும் படியுங்கள்
Subscribe