/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/677_2.jpg)
இயக்குநர், நடிகர், பாடலாசிரியர் எனப் பன்முகத் திறமை கொண்ட டி.ராஜேந்தர் கடந்த 19 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் டி. ராஜேந்தருக்குவயிற்றில் சிறிய ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால் உயர் சிகிச்சை தரவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும், அதனால்மருத்துவர்களின்அறிவுரையின் படி சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதாகவும்அவரின் மகன் சிம்பு நேற்று அறிக்கையின் மூலம் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து டி.ராஜேந்தர் நலம் பெற வேண்டி பலரும்வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்சீமான் டி. ராஜேந்தர் நலம் பெற வேண்டி ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "பெருமதிப்பிற்கும், பேரன்பிற்கும் உரிய ஐயா த.இராஜேந்தர் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். தற்போது உயர் மருத்துவம் பெறுவதற்காக அமெரிக்காவிற்குச் சென்றுள்ள ஐயா ராஜேந்தர் அவர்கள் விரைந்து நலம்பெற்றுத் திரும்ப விழைகிறேன். அன்புத்தம்பி சிலம்பரசன் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது அன்பையும், நம்பிக்கையையும் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பெருமதிப்பிற்கும், பேரன்பிற்கும் உரிய ஐயா த.இராஜேந்தர் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
தற்போது உயர் மருத்துவம் பெறுவதற்காக அமெரிக்காவிற்குச் சென்றுள்ள ஐயா இராஜேந்தர் அவர்கள் விரைந்து நலம்பெற்றுத் திரும்ப விழைகிறேன்.
(1/2) pic.twitter.com/L1ancDPswh
— சீமான் (@SeemanOfficial) May 25, 2022
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)