Published on 26/08/2020 | Edited on 26/08/2020

1990ஆம் ஆண்டு நீங்களும் ஹீரோதான் என்னும் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் வி. கௌதமன். கனவே கலையாதே, மகிழ்ச்சி என்னும் இரு படங்களை இயக்கி இயக்குனராக அறியப்பட்டார். மேலும் இரண்டு டிவி தொடர்களையும் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது குடும்பத்தினருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகரும், இயக்குனரும்ம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், "தம்பி வ.கௌதமன் அவர்களும், அவரின் குடும்பத்தாரும் கரோனா நோய்த்தொற்றிலிருந்து விரைவில் மீண்டு நலம் பெற வாழ்த்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.