Advertisment

“குரு சொன்னது நாம் ஒரே மரபணு என்பதை காட்டுகிறது” - சீமான்

seeman speech in padaiyaanda maaveeraa movie event

வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் தயாரிப்பில் இயக்குநர் வ.கௌதமன் இயக்கி நடித்துள்ள படம் ‘படையாண்ட மாவீரா’. இப்படம் மண்ணையும் மானத்தையும் காக்க வீரம் ஈரம் அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமுத்திரக்கனி, பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், சாய் தீனா, ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷ்குமாரும் பின்னணி இசைக்கு சாம் சி. எஸ்.-சும் இசையமைக்கின்றனர்.

Advertisment

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்ள சென்னையில் நடைபெற்றது. இவர்களோடு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், “உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவன் மாவீரன் பிரபாகரன் என்று பேசியவர் அண்ணன் காடுவெட்டி குரு. ஒரு மாபெரும் சமூகமே மாவீரன் என்று வணங்கிக் கொண்டிருக்கும் குருவே, அண்ணன் பிரபாகரனை மாவீரன் என்று சொன்னது நாம் ஒரே ரத்தம் ஒரே மரபணு என்பதை காட்டுகிறது. அப்படிப்பட்ட காடுவெட்டி குருவின் வாழ்க்கையை தான் தம்பி கௌதமன் 'படையாண்ட மாவீரா' என்று வீரமும் அறமும் சுமந்த படைப்பாக எடுத்துள்ளார்.

கெளதமனின் படைப்பாற்றலை நாம் ஏற்கனவே கண்டுள்ளோம். 'சந்தனக்காடு', 'மகிழ்ச்சி' அவர் திறமைக்கான சான்றுகள். அவரின் அடுத்த படைப்பான‌ 'படையாண்ட மாவீரா' மிகவும் அருமையாக வந்துள்ளது. இதை திரைப்படமாக மட்டும் சுருக்கிவிட முடியாது. மிகுந்த உழைப்பு, சிரமத்திற்கு பிறகு இப்படம் உருவாகியுள்ளது. முன்னோட்டத்தையும், பாடல்களையும் பார்த்தேன், மிகச்சிறப்பு, படத்தை பார்க்க தூண்டுகின்றன. படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

seeman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe