பூமணி, கிழக்கும் மேற்கும், மிட்டாமிராசு ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர் மு.களஞ்சியம். கருங்காலி படத்தை இயக்கி அதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் மு.களஞ்சியம். தற்போது முந்திரிக்காடு என்ற படத்தை இயக்கியுள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ராஜூ முருகன், சீமான், இயக்குனர் சசி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Advertisment

seeman

இந்நிலையில் இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாரளருமான சீமான், கருத்தம்மா படத்தை பாரதிராஜா இயக்கும் சமயத்தில் அவருக்கு துணை இயக்குனராக சீமான் இருந்தார். அப்போது நடந்த ஒரு சம்பவத்தை பற்றி பேசினார்.

Advertisment

“எங்க அப்பா பாரதிராஜா கிழக்குச் சீமையிலே படத்தை முடித்துவிட்டு கருத்தம்மா படத்தை எடுத்துகொண்டிருந்தார். இரவு நேரத்தில் படபிடிப்பு நடந்துகொண்டிருந்தது. அந்த ஊரே கையில் அருவா, கம்புடன் ஓடிக்கொண்டிருந்தது. என்ன சத்தமா ஓடுராங்களே என்று திரும்பி பார்த்து அங்கிருந்த சில ஊர்க்காரர்களிடம் கேட்டால், ‘பக்கத்து ஊருடன் சாதிப் பிரச்சனை’என்றனர்.

அதேசமயத்தில் பெருசுகளும், சின்ன பையன்களும் நிறைய பேர் ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். ‘ஏன் நீங்கள் எல்லாம் போகவில்லையா?’ என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டேன். ‘இல்லைங்க முன்னாடி எல்லாம் இப்படி போயிட்டிருந்ததானுங்க, தேவர் மகன் படம் பார்த்த பிறகு டப்புனு அரிவாள் கம்பெல்லாம் எடுக்க அசிங்கமா இருக்குங்க’ என்றார்கள்.

Advertisment

பல வருடங்களாக ஒருவிஷயத்தை நமக்கு கற்பிச்சத ஒரு திரைக்கதை உடைச்சிடுச்சு. ஹையோ நான் கொடுத்த பாலெல்லாம் இரத்தமா ஓடுதேனு ஒரு ஆத்தா அழுகும்போது அந்த கண்ணீரில் கரைஞ்சுவிட்டது சாதி. அவர்கள் உணர்ந்துவிட்டார்கள், அங்க மாற்றம் நிகழ்ந்துவிட்டது. அதை மாதிரி இந்தப் படமும் இளைய தலைமுறையினருக்கு சாதி என்ற நஞ்சை ஊட்டவிடாமல் தடுக்கும் ஒரு கேடயமாக இருக்கும் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை” என்று கூறினார்.