Advertisment

“இந்தக் கருத்தை வலியுறுத்தி நான் பேசியிருக்கிறேன்" - கார்த்தி படத்தை பாராட்டிய சீமான்

seeman praises kaarthi movie sardar

மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'சர்தார்' படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் மற்றும் லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இசை சார்ந்த பணிகளை ஜி.வி. பிரகாஷ் குமார் மேற்கொண்டிருந்தார். ஸ்பை த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தற்போது வரை ரூ.50 கோடியை வசூலித்துள்ளது. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisment

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 'சர்தார்' படத்தை பார்த்து பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "ரொம்ப நல்லாவந்திருக்கு. இதனை படம் என்று சொல்ல முடியாது. ஒரு படிப்பு என்று தான் சொல்ல வேண்டும். “இந்தக் கருத்தை வலியுறுத்தி நான் பேசியிருக்கிறேன். தண்ணீர் மிகப் பெரிய வியாபாரப் பொருளாக மாற்றப்பட்டுவிட்டது.

Advertisment

உலக உயிர்களின் உயிர் உடமை இன்று சந்தைப் பொருளாக மாறியதுஎவ்வளவு பெரிய பேராபத்தை நோக்கிய பயணம் என்பது புரிய வரும். இந்தப் படம் அதனை ரொம்ப ஆழமாக விளக்கி சொல்லுது. இயக்குநர் மித்ரனுக்கு சமூக பொறுப்புள்ள ஒரு பார்வை இருக்கு. படத்தில் அனைத்தும் நேர்த்தியாக உள்ளது. ஒரு சிறந்த படைப்பு. படக்குழுவினருக்கு எனது அன்பும் பாராட்டுகளும்" எனக் கூறியுள்ளார்.

actor karthi Sardar seeman
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe