Skip to main content

"இன்னிசை இளவரசன் அன்புத்தம்பி யுவன்..." - சீமான் பாராட்டு  

Published on 07/05/2022 | Edited on 09/05/2022

 

seeman praised yuvan shankar raja

 

கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான 'அரவிந்தன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் சங்கர் ராஜா அடுத்ததாக 'தீனா', 'துள்ளுவதோ இளமை', 'மௌனம் பேசியதே' உள்ளிட்ட படங்கள் தொடங்கி 'மாநாடு', 'வலிமை' படம் வரை தனது நீண்ட இசை பயணத்தில் நீங்கா முத்திரையை பதித்துள்ளார். காதல், சோகம், இன்பம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளுக்கும் தனது இசை மூலம் ஈடு செய்துள்ள யுவன் தனது சினிமா வாழ்க்கையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனையொட்டி யுவன் சங்கர் ராஜாவுக்கு பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

 

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் யுவன் சங்கர் ராஜாவை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "புகழொளி மிளிரும்  இசைப்பயணத்தில் 25வது ஆண்டினை நிறைவு செய்துள்ள இன்னிசை இளவரசன் என் அன்புத்தம்பி யுவன் சங்கர் ராஜா அவர்களுக்கு பெருமித வாழ்த்துகள். இளம் வயதில் இசைத்துறையில் நுழைந்து தன் தனித்திறமையால் வெற்றித்தடம் பதித்து, நம் செவிகளில் உற்சாகத்துள்ளலாய், ஆற்றுப்படுத்தும் ஆறுதலாய், நிமிர வைக்கும் நம்பிக்கையாய், உருக வைக்கும் காதலாய், ஊற்றெடுக்கும் தாலாட்டாய் தவழ்ந்து நம் வாழ்வின் சகலவிதமான சூழல்களிலும் சரிபாதியாய் இடம் பிடிக்கும் உயிராழம் கொண்ட தேனிசை தம்பி யுவனுடையது. தன் தீந்தமிழ் பாடல்களால் திசையெங்கும் வீசுகிற காற்றை இனிக்க வைத்து, கேட்போர் மனங்களில் வற்றாத அருவியாய் கொட்டி தீர்க்கிற தம்பி யுவனின் இசை இன்னும் பல ஆண்டுகள் தமிழர் இதயங்களை நிரப்பி. புகழின் உச்சம் தொட வேண்டும் என்ற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். காலங்களை வென்று நிற்கும் இசைப்படைப்புகளால் சாதனைப் பக்கங்களில் நிறைந்து ஒளிரும் இன்னிசை இளவரசன் ஏன் அன்புத்தம்சி யுவன் சங்கர் ராஜா அவர்களுக்கு எனது மனம் நெகிழ்ந்த அன்பினையும், பூரிப்பு வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

தீயாய் பரவிய தகவல் - முற்றுப்புள்ளி வைத்த யுவன் ஷங்கர் ராஜா

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
yuvan about his instagram account de activate issue

தமிழில் சினிமாவில் 150க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா. இப்போது வெங்கட் பிரபு - விஜய் கூட்டணியில் உருவாகும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் ராம் - நிவின் பாலி கூட்டணியில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை, வடிவேலு - ஃபகத் ஃபாசில் நடிக்கும் மாரிசன், சூரி - துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகும் கருடன் உள்ளிட்ட சில படங்களைக் கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தொடர்ந்து தனது படங்களின் அப்டேட் மற்றும் அவரது சொந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து வருவார். ஆனால் தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடிரென ஆக்டிவாக இல்லை. அவரது பக்கம் டீ ஆக்டிவேட் செய்யப்பட்டதா அல்லது முடக்கப்பட்டதா எனப் பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. மேலும் சமீபத்தில் வெளியான விஜய் பட பாடல் கலவையான விமர்சனம் பெற்றதாகச் சில தகவல்களும் சமூக வலைத்தளங்களில் உலா வந்தது. 

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து உலா வந்த தகவலுக்கு தற்போது யுவன் ஷங்கர் ராஜா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவரது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “இது ஒரு தொழில்நுட்ப கோளாறு, அதை சரி செய்ய என்னுடைய டீம் முயற்சி செய்து வருகிறது. விரைவில் வருகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.