Advertisment

சீமான் ஹீரோவாக நடிக்கும் படம் இறுதிக்கட்ட ஷூட்டிங்...

கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான பாஞ்சாலங்குறிச்சி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சீமான். இந்த படத்தில் பிரபு ஹீரோவாக நடிக்க மதுபாலா ஹீரோயினாக நடித்திருப்பார். இதனை அடுத்து தம்பி, வாழ்த்துகள் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். மேலும் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதில் முக்கியமாக பள்ளிக்கூடம், மாயாண்டி குடும்பத்தார் அவருடைய நடிப்பு பார்ப்பவர்களை கவரும் வண்ணம் இருக்கும்.

Advertisment

seeman

தற்போது சினிமாவிலிருந்து விலகி அரசியலில் இறங்கியுள்ள சீமான் மீண்டும் சினிமாவில் தலகாட்ட தொடங்கியுள்ளார்.

Advertisment

இந்நிலையில், சீமானை ஹீரோவாக வைத்து ஒரு படம் தயாராகி வருகிறது. அமீரா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், இன்னொரு ஹீரோவாக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார். மேலும், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, வினோதினி, கூத்துப்பட்டறை ஜெயக்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சீமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரா.சுப்ரமணியன், இந்தப் படத்தை இயக்குகிறார். மலையாள நடிகை அனு சித்தாரா பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் மம்மூட்டி, திலீப் ஜோடியாக மலையாளப் படங்களில் நடித்தவர். பெண்களை மையமாக வைத்து உருவாகிறது இந்த படம்.

டூலெட் படத்துக்காகத் தேசிய விருது பெற்ற இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான செழியன், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தம்பி திரைக்களம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சென்னை மற்றும் தென்காசி பகுதிகளில் நடைபெற்றுள்ளது.படப்பிடிப்பு சென்னை மற்றும் தென்காசியில் 40 நாட்கள் நடை பெற்றது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல் சுற்றுவட்டாரங்களில் நடைபெறுகிறது.

kollywood seeman
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe