seeman as farmer in vignesh shivan movie

இயக்குநர் விக்னேஷ் சிவன், அஜித்தின் 62வது படத்தை இயக்க கமிட்டான நிலையில் சில காரணங்களால் அதிலிருந்து விலக்கப்பட்டார். இதையடுத்து பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். கதாநாயாகியாக தெலுங்கு இளம் நடிகை கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Advertisment

இப்படத்தின் பணிகள் பூஜையுடன் கடந்த மாதம் தொடங்கியது. இப்படத்திற்கு ‘எல்.ஐ.சி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) எனத் தலைப்பு வைக்கப்பட்டது. ஆனால் இந்த தலைப்பு என்னுடையது என்று கூறி இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் எஸ்.எஸ். குமரன், விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடுப்பதாக அறிக்கை வெளியிட்டார். பின்பு எல்.ஐ.சி நிறுவனம், லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற தலைப்பு பயன்படுத்துவதை நிறுத்தக் கோரி பட நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.

Advertisment

இப்படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும்ஒரு தகவல் உலா வருகிறது. மேலும் இயக்குநர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. இதனிடையே இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கோவை ஈஷா யோகா மையத்தில் தொடங்கியது. இந்த நிலையில் சீமான் கதாபாத்திரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிரதீப் ரங்கநாதனுக்கு தந்தையாக விவசாயி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.