seeman about vijay leo movie title

'வாரிசு' படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படம் 'லியோ'. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மேலும், பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்த நிலையில் 'லியோ' என்ற படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழர்கள் தான் படம் பார்க்கிறார்கள். நாம் தான் நம் தாய்மொழியை அழியாமல் சிதையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த பொறுப்பு தம்பி விஜய்க்கும் இருக்கு. தொடர்ந்து பிகில், விசில் என தலைப்பு வருகிறது. அதனால் அதை மாத்திக்கணும்" என்றார்.

Advertisment

இதே போல் விஜய்யின் முந்தைய படங்களான 'பிகில்', 'மாஸ்டர்' போன்ற படங்களுக்கும் தலைப்பு தொடர்பாக பிரச்சனை எழுந்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசு, ‘தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருக்கும் விஜய் தொடர்ந்து ஆங்கிலப் பெயர்களைத் தனது படங்களில் தலைப்பாக வைப்பதன் மர்மம் என்னவோ’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால், எந்த மாற்றமும் இல்லாமல் அதே தலைப்பில் விஜய் படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.