Advertisment

"அங்க போய் திட்டுவார்" - சீமானால் சிரிப்பலையில் நிறைந்த அரங்கம்

seemaan speech at ilaiyaraaja 80 birthday function

Advertisment

திரைத்துறையில் 40 வருடங்களுக்கு மேலாக தன் இசையால் ரசிகர்களைக் கட்டிப் போட்ட இளையராஜா தனது 80வது வயதில் நேற்று முதல் அடியெடுத்து வைத்தார். இதனையொட்டி இளையராஜாவின் பிறந்தநாள் விழா நேற்று மாலை பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது மேடைக்கு ஏறிய சீமான் மற்றும் அன்புமணியும் இளையராஜாவிற்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். பின்பு பேசிய சீமான், "இளையராஜாவை வாழ்த்துகிற வாய்ப்பை பெற்றமைக்கு உண்மையிலே மகிழ்கிறோம். பிறந்த பலனை அடைந்துவிட்டது போல நெகிழ்ச்சியாக உள்ளது. இங்குள்ள நிறைய பேருக்கு அவர்களது தாய் பாடிய தாலாட்டு பாட்டு நினைவில் இருக்கிறதாஎன்பது தெரியவில்லை. என் அம்மா பாடிய எந்த பாட்டை கேட்டு நான் தூங்கினேன் என தெரியாது. ஆனால் எங்களை எல்லாம் தாலாட்டி தூங்க வைத்த ஒரே பாட்டு எங்களின் ஆண் தாய் இளையராஜாவின் பட்டு தான்.

பலபேரின் வாழ்க்கைக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார். என் அப்பா, படிப்பை முடித்துவிட்டு என்னை ராணுவத்துக்கு அல்லது வாத்தியாராக போகச் சொன்னார். ஆனால் இங்க கொண்டு வந்து இறக்கிவிட்டதுமேதை இளையராஜா தான். பாட்டை போட்டு திசை திருப்பிய ஆட்களுள் இளையராஜா தான் முதன்மையானவர். இசையை படித்தவுடன் அதை வைத்து பாட்டு போட்டுவிடலாம். ஏன்நான் கூட பாடுவேன். யார் வேண்டுமானாலும் பாடலாம். ஆனால் மனித மன உணர்வை இசையால் மொழி பெயர்க்கிற ஆற்றல் அளப்பரியது. அப்படி ஆற்றல் பெற்ற இசைமேதை எங்கள் இளையராஜா" என்றார்.

Advertisment

மேலும் கடலோரக் கவிதைகள் படத்தில் வரும் ஒரு காட்சியை விவரித்து 'அடி ஆத்தாடி...' பாடலை பாடினார். அதன் பிறகு பேசிய அவர், "இளையராஜா முன்பு பாடி காட்டியதற்கு வருந்துகிறேன். பின்பு அங்க போய் ஸ்ருதி இல்லாம பாடுறார்ன்னு திட்டுவாரு" என்று சொன்னதும் அரங்கம் சிரிப்பலையில் நிறைந்தது. பிறகு "வார்த்தைகளால் சொல்லி கடத்த முடியாது. அதற்காகத்தான் பாடி காட்டுகிறேன்" என்று பேசினார் சீமான்.

seeman Ilaiyaraaja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe