/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/11_196.jpg)
தமிழ் மற்றும் தெலுங்கில் பல ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களிடம் பிரபலமானவர் தேவி ஸ்ரீ பிரசாத். சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'புஷ்பா' பட வெற்றிக்கு கூட இவரின் இசையும் ஒரு முக்கிய காரணம். இவர் தற்போது தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'சூர்யா 42' படத்தில் இசையமைக்கிறார். இதனிடையே தேவி ஸ்ரீ பிரசாத், பிரபல நடிகை பூஜிதா பொன்னாடாவை ரகசிய திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் நடிகை பூஜிதா பொன்னாடா ரகசிய திருமணம் தகவல் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார். அதில், "நானும் தேவிஸ்ரீபிரசாத்தும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக பரவி வரும் தகவல் உண்மை இல்லை. இது போன்ற தகவல்கள் எப்படி பரவுகிறது என்று எனக்கு தெரியவில்லை. அவருடன் நான் டேட்டிங் கூட சென்றதில்லை. தற்போது வரை நான் சிங்கிளாக தான் இருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)