/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a2313.jpg)
இயக்குநர் அ.வினோத் இயக்கத்தில் வெங்கட் நாராயண தயாரிப்பில் விஜய் கதாநாயகனாக நடித்து வரும் படத்திற்கு பெயர் வெளியிடப்படாமல் இருந்து வந்தது. இதன் காரணமாக தற்காலிகமாக ‘தளபதி 69’ என அழைக்கப்பட்ட இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் , நரேன், கௌதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட பிரபல நடிகர் பட்டாளம் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
முழுநேர அரசியலுக்கு முன் விஜய்யின் கடைசி படமாக சொல்லப்படும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் இந்தாண்டு அக்டோபரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் ஒரு பகுதியாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடைக்ஷன் தங்களது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தது. மேலும் படத்தின் பணிகள் 69 சதவீதம் முடிந்துள்ளதாக அப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
விஜய் நடிக்கும் கடைசி படத்திற்கு ‘ஜன நாயகன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று காலை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. பேருந்தின் மீது விஜய் ஏறி நின்று செல்பி எடுப்பது போன்று இந்த பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருந்தது.இந்நிலையில் 'ஜன நாயகன்' படத்தின் இரண்டாவது போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் நான் ஆணையிட்டால் எனும் பாடல் எம்ஜிஆர் பாடல் வரியுடன் விஜய் கையில் சாட்டையை சுழற்றுவது போன்ற படம் இடம் பெற்றுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)