Skip to main content

பூச்சாண்டி காட்டினால் கை தட்ட காத்திருக்கும் சமூகத்தை என்ன சொல்வது? - பிரபல இசையமைப்பாளர் வேதனை!

Published on 17/06/2021 | Edited on 17/06/2021

 

dndfndfb

 

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர், ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை எழுப்பினர். இதுதொடர்பான வழக்கில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ உட்பட 8 பிரிவுகளின்கீழ் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவுசெய்தனர். இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், டெல்லியில் சிவசங்கர் பாபாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து அவர் நேற்று (16.06.2021) சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். சென்னையில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. 

 

பாலியல் வன்கொடுமை செய்த சிவசங்கர் பாபா மீது பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இச்சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்... "ஆன்மீகம் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டிருக்கும் பிசாசுகளை ஒழிக்க வேண்டும். இவர்களால், ஆன்மீகத்துக்கு இழுக்கு. நல்ல ஆன்மீகவாதிகளுக்கும் இழுக்கு. உண்மையான ஆன்மீகவாதிகள் சொல்லும் விஷயங்களுக்கு மார்க்கெட் இல்லை. பூச்சாண்டி காட்டினால், கை தட்ட காத்திருக்கும் சமூகத்தை என்ன சொல்வது?" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"வாய் கிழிய பேசுவார், அவரும் இன்று விலை போகிவிட்டார்" - கம்யூனிச இயக்குநரை சாடிய ஷான் ரோல்டன்

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

Sean Roldan tweet about his friend and director

 

தமிழில் 'வாயை மூடி பேசவும்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஷான் ரோல்டன் தொடர்ந்து 'முண்டாசுப்பட்டி', 'ப.பாண்டி', 'மெஹந்தி சர்க்கஸ்' உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானார். கடைசியாக ஞானவேல் இயக்கத்தில் வெளியான 'ஜெய் பீம்' படத்தில் இசையமைத்திருந்தார். 

 

இந்நிலையில் ஷான் ரோல்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "என் நண்பர் இயக்குநர் ஒருவர் கம்யூனிச சித்தாந்தத்தை தன் உயிர்மூச்சாய் கொண்டவர். எங்கள் பிணைப்பையும், கலை சார்ந்த கெமிஸ்ட்ரியையும் இந்த திரையுலகம் நன்கு அறியும். ஆனால், அவரும் இன்று வியாபார கோட்பாட்டுக்கு விலை போனது வருத்தத்தை அளிக்கிறது. சித்தாந்தங்களை இங்கு வாய் கிழிய பேசுவார்கள். ஆனால், நடைமுறையில் இவையெல்லாம் நம் தமிழ்நாட்டில் போணியாவதில்லை என்பதே நிதர்சனம். இனி, சித்தாந்தம் என்ற பெயரில் வாய் சவடால் விடுபவர்களை புறக்கணியுங்கள். மார்க்கெட் தான் நம் கடவுள்" என குறிப்பிட்டுள்ளார்.  

 

இவரது பதிவு தற்போது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ராஜு முருகன் மற்றும் ஞானவேல் ஆகியோர் தொடர்ச்சியாக கம்யூனிச சித்தாந்தம் குறித்து பேசுபவர்களாக அறியப்படுகிறார்கள். இருவருடனும் ஷான் ரோல்டன் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

 

Next Story

மூன்று லட்சம் பார்வைகளைக் கடந்து கவனம் ஈர்க்கும் 'பறை' தனியிசைப் பாடல் 

Published on 05/03/2022 | Edited on 05/03/2022

 

Parai

 

குமரன் இயக்கத்தில் பிரபல இசையமைப்பாளரான ஷான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ளது 'பறை' தனி இசைப்பாடல். பறை இசைக்கலைஞரின் சடலத்தை ஊருக்குள் எடுத்துவர நிலவும் எதிர்ப்பை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கான வரிகளை கே.லோகன் மற்றும் ஷான் ரோல்டன் எழுதியுள்ளனர். இப்பாடலை இயக்கியுள்ள குமரன், கதிர் நடிப்பில் வெளியான ஜாடா படத்தை இயக்கியவர் ஆவார். நேற்று நடைபெற்ற இப்பாடல் வெளியீட்டு விழாவில், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், இயக்குநர் குமரன், தா.செ.ஞானவேல், நடிகர் ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

 

ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவனம்பெற்ற இப்பாடல் யூடியூப் தளத்தில் ஒரே நாளில் மூன்று லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் இப்பாடல் குழுவினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.