/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sathuranga-vettai-audio-launch-manobala-ishara-030.jpg)
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் பொதுமக்களுக்கு வீடியோக்கள், நேர்காணல் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலம் கரோனா விழிப்புணர்வைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் மாரி 2, பா பாண்டி, மெஹந்தி சர்க்கஸ் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தன்னை ஒரு ஊடகம் பேட்டி தரச்சொல்லி தொல்லை கொடுப்பதாகச் சமூகவலைத்தளத்தில் நேற்று பதிவிட்டார். இதற்கு ஒருசேர ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பிய நிலையில் இவர் தற்போது கடவுள் பக்தி குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... "உண்மையான பக்தன் எந்த உயிரையும் வதைக்கமாட்டான், மனிதரில் பேதம் பாரக்கமாட்டான். பக்தி என்ற போர்வையில் இச்செயல்களைச் செய்பவரை இறைவன் அண்டமாட்டான்" எனக் கூறியுள்ளார்.
Follow Us