fga

Advertisment

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் பொதுமக்களுக்கு வீடியோக்கள், நேர்காணல் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலம் கரோனா விழிப்புணர்வைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் மாரி 2, பா பாண்டி, மெஹந்தி சர்க்கஸ் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தன்னை ஒரு ஊடகம் பேட்டி தரச்சொல்லி தொல்லை கொடுப்பதாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்.. ''என்னை வேண்டுமென்றே வாரிக்கொண்டே இருக்கும் ஒரு ஊடகம், என்னை அவர்களுக்கு பேட்டி தரச்சொல்லி தொல்லை கொடுக்கின்றனர். இதுதான் அக்மாரக் எச்சைத்தனம். பேட்டி கொடக்கவில்லையென்றால் எதிர் பிரச்சாரம் செய்யும் புதிய டிரெண்ட் ''மீடியா டெரரிசம்'' எனப் பதிவிட்டுள்ளார்.