"வாய் கிழிய பேசுவார், அவரும் இன்று விலை போகிவிட்டார்" - கம்யூனிச இயக்குநரை சாடிய ஷான் ரோல்டன்

Sean Roldan tweet about his friend and director

தமிழில் 'வாயை மூடி பேசவும்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஷான் ரோல்டன் தொடர்ந்து 'முண்டாசுப்பட்டி', 'ப.பாண்டி', 'மெஹந்தி சர்க்கஸ்' உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானார். கடைசியாக ஞானவேல் இயக்கத்தில் வெளியான 'ஜெய் பீம்' படத்தில் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் ஷான் ரோல்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "என் நண்பர் இயக்குநர் ஒருவர் கம்யூனிச சித்தாந்தத்தை தன் உயிர்மூச்சாய் கொண்டவர். எங்கள் பிணைப்பையும், கலை சார்ந்த கெமிஸ்ட்ரியையும் இந்த திரையுலகம் நன்கு அறியும். ஆனால், அவரும் இன்று வியாபார கோட்பாட்டுக்கு விலை போனது வருத்தத்தை அளிக்கிறது. சித்தாந்தங்களை இங்கு வாய் கிழிய பேசுவார்கள். ஆனால், நடைமுறையில் இவையெல்லாம் நம் தமிழ்நாட்டில் போணியாவதில்லை என்பதே நிதர்சனம். இனி, சித்தாந்தம் என்ற பெயரில் வாய் சவடால் விடுபவர்களை புறக்கணியுங்கள். மார்க்கெட் தான் நம் கடவுள்" என குறிப்பிட்டுள்ளார்.

இவரது பதிவு தற்போது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ராஜு முருகன் மற்றும் ஞானவேல் ஆகியோர் தொடர்ச்சியாக கம்யூனிச சித்தாந்தம் குறித்து பேசுபவர்களாக அறியப்படுகிறார்கள். இருவருடனும் ஷான் ரோல்டன் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

seanrolden
இதையும் படியுங்கள்
Subscribe