scooty thefted in director vikraman house

தமிழில் பூவே உனக்காக, சூரியவம்சம், வானத்தைப்போலஉள்ளிட்ட பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் விக்ரமன். இவர் சென்னை அசோக் நகர் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தனது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டி திருடு போயுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள விக்ரமன், "நேற்று முன்தினம் என் உறவினர்கள் என் வீட்டிற்கு வந்திருந்தார்கள். காலை 9.30 மணிக்கு ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டியில் வந்தார்கள். வீட்டிற்கு வந்து என் மனைவியை பார்த்துவிட்டு திரும்பி வெளியே சென்றபோது ஸ்கூட்டரை காணவில்லை.

Advertisment

அருகில் இருந்த சிசிடிவியை பார்த்தபோது 2 நபர்கள் சட்டையால் முகத்தை மறைத்தபடிவந்து பூட்டப்பட்டிருந்த ஸ்கூட்டரை உடைத்து திருட்டுத் தனமாக எடுத்துச் சென்றது தெரிய வந்தது" என்றார். மேலும் போலீஸ் கண்டுபிடித்து தருவார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளதாக தெரிவித்தார்.