Advertisment

ஊர்வசி படத்துடன் தொடங்கிய எஸ்சிஓ திரைப்பட விழா

SCO Film Festival start with  Urvashi Appatha movie

Advertisment

மத்திய அரசும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பும் இணைந்து நடத்தும் எஸ்சிஓ திரைப்பட விழா இன்று மும்பையில் தொடங்கியுள்ளது. வரும் 31ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விழாவின் தொடக்க நாளான இன்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பிரியதர்ஷன் இயக்கத்தில் ஊர்வசி நடித்துள்ள 'அப்பத்தா' படம் திரையிடப்பட்டது. இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.இந்த நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் தொடர்பாகப் பேசிய அமைச்சர் அனுராக் தாக்கூர், "பிரியதர்ஷனின் அப்பத்தா படம் அன்பையும், நமது செல்லப்பிராணிகளுடனான பிணைப்பையும்கூறுகின்ற மனதைத் தொடும்கதை. வரும் 31ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் அழகியல் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் படங்கள் திரையிடப்பட உள்ளன" என்றார்.

anurag thakur urvashi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe