School students who enjoyed watching the movie 'Amaran'!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் ராணுவம் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் போரில் எதிரிகளை தாக்குவது , ராணுவத்தில் உள்ள பல்வேறு துறைகள் பற்றி இதில் காட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

திரைப்படத்தில் தேச ஒற்றுமையை பாதுகாக்கும் வகையில் அமைத்துள்ளதால் சிதம்பரத்தில் உள்ள ஷம்போர்ட் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ராணுவம் மற்றும் ராணுவ பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளியில் பயிலும் 6-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு திரைப்படத்தைக் காண்பிப்பதற்கு ஏற்பாடு செய்தனர். இதனைச் சிதம்பரம் லேனாத்திரையரங்கில் திரைப்படத்தை பார்ப்பதற்குச் செவ்வாய்க்கிழமை பள்ளியில் பயிலும் 276 மாணவ மாணவிகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட ஆசிரியர் கலந்துகொண்டு பார்த்தனர்.

இந்நிகழ்வில் சிதம்பரம் காவல்துறை டி.எஸ்.பி லாமேக், சிதம்பரம் நகர காவல் உதவி ஆய்வாளர் பரணிதரன் உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ராணுவம் குறித்தும், ராணுவ பயிற்சிகள், ராணுவத்தினால் நாட்டிற்கு எவ்வாறு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என்பது குறித்து. மாணவர்கள் மத்தியில் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

Advertisment

School students who enjoyed watching the movie 'Amaran'!

இது குறித்து பள்ளியின் தாளாளர் ஹரிகரன் கூறுகையில், “இந்த திரைப்படத்தில் ராணுவம் மற்றும் பல்வேறு துறைகள் உள்ளது. ராணுவத்தில் எப்படி சேர்வது ராணுவ பயிற்சிகள் எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து படக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது அதனால் மாணவர்களுக்கு ராணுவம் குறித்தும் ராணுவ பயிற்சிகள் குறித்தும் ராணுவத்தில் எப்படி சேர்வது என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் முழு தொகையும் செலுத்தி திரைப்படம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார். இந்த திரைப்படத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் பார்த்து வாழ்த்துக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.