Scene Ah Scene Ah - Lyrical

Advertisment

மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாவீரன்'. இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பரத் சங்கர் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. முன்னதாக வெளியான படத்தின் டைட்டில் வீடியோ படத்தின் மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இப்போது வெளியாகியுள்ளது. ‘வானாகி மண்ணாகி’ என பாடகர்ஆந்தங்குடி இளையராஜா பாடலை ஆரம்பித்து வைக்க ‘ஸீனா ஸீனா ஆனோமே ஸீனா’ என அனிருத் பாடுகிறார். இப்பாடலை கபிலன் மற்றும் லோகேஷ் இணைந்து எழுதியுள்ளார்கள். பாடலுக்கு ஷோபி பால்ராஜ் நடனம் அமைத்திருக்கிறார். சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியாகியிருக்கிற பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.