scarlette

Advertisment

உலகம் முழுவதும் தனக்கென பல கோடி ரசிகர்களைச் சம்பாதித்து வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் ஸ்கார்லெட் ஜொஹன்ஸன். மார்வெல் படங்களில், 'பிளாக் விடோவ்' என்னும் கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமான இவர், உலகளவில் பெரும் சம்பளத்தைப் பெரும் நடிகைகளின் லிஸ்ட்டில் முதலிடம் பிடிப்பவர்.

ஸ்கார்லெட் ஜொஹன்ஸன், காலின் ஜோஸ்ட் என்பவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். கரோனா அச்சுறுத்தலால் பலரையும் அழைக்கமுடியாமல், தனக்கு நெருக்கமானவர்களை மட்டும் திருமணத்திற்கு அழைப்பு விடுத்து ரகசியத் திருமணம் செய்துள்ளார்.

காலின் ஜோஸ்ட், டிவி நிகழ்ச்சிகளில் காமெடியனாகவும், எழுத்தாளராகவும் உள்ளார். கடந்த மூன்று வருடங்களாக இவரும் ஸ்கார்லெட்டும் 'டேட்' செய்து வந்த நிலையில் கடந்த வருட மே மாதம் நிச்சயம் செய்துகொண்டனர்.

Advertisment

38 வயதாகும் காலின் ஜோஸ்ட்க்கு இதுதான் முதல் திருமணம், ஸ்கார்லெட்டுக்கு இது மூன்றாவது திருமணமாகும். ஏற்கனவே ஸ்கார்லெட் நடிகர் ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் அவரைத் தொடர்ந்து தொழிலதிபர் ரோமனுடன் திருமணம் செய்துகொண்டு, பின்னர் விவாகரத்து செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தொழிலதிபர் ரோமன் மற்றும் ஸ்கார்லெட் இருவருக்கும் மகள் உண்டு.