வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா. அதனைத் தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதனிடையே ஆர்யாவுடன் காதல் ஏற்பட, இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். லாக்டவுனில் வீட்டிலிருக்கும் நடிகை சாயிஷா டான்ஸ், உடற்பயிற்சி செய்வது உள்ளிட்ட வீடியோக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.
My partner in action ?????? @sayyeshaa ? pic.twitter.com/th1TuGR5v5
இந்நிலையில் சாயிஷா தனது கணவர் ஆர்யாவுடன் இணைந்து பாக்சிங் பயிற்சி மேற்கொள்ள தொடங்கியுள்ளார். ட்விட்டரில் மனைவி சாயிஷா பாக்ஸிங் கற்றுகொள்ளும் வீடியோவை ஆர்யா வெளியிட்டுள்ளார்.