Advertisment

say no to drugs sarathkumar 'aazhi' movie first look poster released by vijay sethupathi

சரத்குமார், 'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது விஜயின் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே அவரது 150-வது படமான 'தி ஸ்மைல் மேன்' படத்திலும் '888 ப்ரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் மாதவ் ராமதாசன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் சரத்குமார் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சரத்குமாருக்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் சரத்குமாரின் 150-வது படமான 'தி ஸ்மைல் மேன்' படக்குழு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளது. அதோடு சரத்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்துள்ளது. இப்படத்தை ஷ்யாம் பிரவீன் இயக்க சலீல் தாஸ் தயாரிக்கிறார். கவாஸ்கர் அவினாஷ் என்பவர் இசையமைக்கிறார்.

மேலும் '888 ப்ரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் சரத்குமார் நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. அதன் படி 'ஆழி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்போஸ்டரில் போதை பொருளுக்கு நோ சொல்லுங்கள் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதனை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு சரத்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.