வாட்ச்மேனாக பணிபுரியும் பிரபல நடிகர்...

பாலிவுட் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். இவர் தற்போது ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இவருடைய படங்கள் அனைத்தும் குறைந்த செலவிலான படங்களாகவே எடுக்கப்பட்டு வருகிறது. கலைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்க நினைப்பவர்களில் இவரும் ஒருவர். இவருடைய படங்களில் நடிகராக நடித்தவர் சவி சிது.

watchaman

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

சில படங்களில் சிறந்த கதாபாத்திரங்களில் நடித்த இவர், தற்போது சினிமா வாய்ப்புகள் இண்றி வாட்ச் மேனாக வேலை பார்ப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். “குடும்பத்தில் அடுத்தடுத்து அம்மா, அப்பா, என் மனைவி என மூவரும் மறைந்துவிட்டார்கள். அதனால் சினிமாவில் இருந்து கொஞ்சம் விலகினேன். பின்னர், உடல் நிலை சரியில்லாததால் பண கஷ்டம் ஏற்பட்டது. ஆதலால் நான் வாட்ச்மேன் வேலை பார்க்கிறேன்” என்று அந்த பேட்டியில் கூறினார்.

பின்னர், இவருடைய பேட்டி வைரலானது. தற்போது இவருக்கு உதவி செய்ய பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் முன்வந்துள்ளனர்.

anurag kashyap Bollywood cinema
இதையும் படியுங்கள்
Subscribe