சத்யராஜ் நடிப்பில் முகமது ரசித் தயாரிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்'. இந்த சீரிஸில் சீதா, ரேகா, வர்ஷா பொல்லம்மா, ரக்ஷன், லிவிங்ஸ்டன், அஜீத் காலிக், கிருத்திகா மனோகர், ராகவி மற்றும் ரேஷ்மா பசுபால்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தாமிரா இயக்கியுள்ள இந்த வெப் சீரிஸுக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.
இந்த சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மூன்று ஹீரோயின்களுடன் சத்யராஜ் இடம்பெற்றிருக்கும் 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது. அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.