/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/365_9.jpg)
பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு மீண்டும் திரைப்படமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக ‘பிஎம் நரேந்திர மோடி’(PM Narendra Modi) என்ற தலைப்பில் ஓமுங் குமார் இயக்கத்தில் வெளியானது. அதில் மோடி கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்திருந்தார். மேலும் மோடியின் வாழ்கையை தழுவி ‘மோடி: ஜர்னி ஆஃப் எ காமன் மேன்’(Modi: Journey of A Common Man) என்ற தலைப்பில் ஒரு வெப் தொடர் வெளியானதுது. இத்தொடர் இரண்டு சீசனாக வெளியானது. முதல் சீசன் 2019லும் இரண்டாவது சீசன், 2020லும் வெளியானது.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை தழுவி இன்னொரு படம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது., அதில் மோடி கதாபாத்தரத்தில் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கான அனைத்து வேளைகளும் தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் முதற்கட்டமாக படபிடிப்பு தொடங்கப்டும் என முணுமுணுக்கின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சத்யராஜ், இதற்கு முன்னதாக பெரியார் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்திருந்தார். அப்போது, பெரியார் மீது வைத்திருந்த கொள்கை பற்று மற்றும் மரியாதையின் காரணமாகவும் அப்படத்திற்கு ஊதியம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். திரைப்படங்களைத்தவிர்த்து, சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தும் வருகிறார். இந்த சூழ்நிலையில் மோடியின் வாழ்க்கை வரலாற்றில் நரேந்திர மோடியாக சத்திராஜ் நடிக்கவுள்ளது கோலிவுட்டில் ஹாட் செய்தியாக மாறியிருக்கிறது. இவர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்பன் படம் இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)