sathyaraj tested positive covid19

இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, இந்தியாவில்உள்ள முக்கிய நபர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலருக்கு கரோனாதொற்று ஏற்படுகிறது.

Advertisment

சமீபத்தில் நடிகர்கள் அருண் விஜய், மகேஷ் பாபு, நடிகைகள் மீனா, த்ரிஷா, ஷெரின், லட்சுமி மஞ்சு இசைமைப்பாளர்தமன். மரைக்காயர் படத்தின் இயக்குநர் பிரியதர்ஷன் உள்ளிட்ட பல திரை பிரபலன்களுக்கு காரோணதொற்று ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் நடிகர் சத்யராஜுக்கு கரோனாதொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் சென்னையில்உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisment