Skip to main content

'முன்பு நடிகர் மணிவண்ணன்...இப்போது இவர்' - சத்யராஜ் 

Published on 28/09/2018 | Edited on 28/09/2018
sathyaraj

 

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள படம் 'நோட்டா'. அரிமாநம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் 'அர்ஜுன் ரெட்டி' புகழ் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்க, சன்சனா நடராஜன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பிக்பாஸ் 2 புகழ் யாஷிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகர் சத்யராஜ் பேசியபோது...."நடப்பு அரசியலை அதிரடியாக படமாக எடுக்கும் தைரியம் இயக்குனர் மணிவண்ணனுக்கு மட்டுமே இருந்தது.

 

 

 

அந்த வரிசையில் அமைதிப்படை, கோ என அரசியல் படங்களில் புதிய பாணியை புகுத்தியது போல இந்தப்படத்திலும் புகுத்தியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் சங்கர். எனக்கு பொதுவாகவே வேறு மொழியில் பேசி நடிப்பது தான் கொஞ்சம் கஷ்டமான விஷயம். நண்பன் படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்காக தெலுங்கை தமிழில் எழுதி வைத்துக்கொண்டு ஈஸியாக பேசிவிடலாம் என நினைத்தேன். ஆனால் ஒருநாள் முழுதும் முயன்றும் என்னால் ஒரிஜினல் தெலுங்கில் பேசமுடியவே இல்லை. ஆனால் இந்தப்படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டாவோ, அழகான தமிழ் உச்சரிப்புடன் வசனங்களை பேசியதுடன் நாலு பக்க வசனங்களை ஞாபகமாக வைத்து பேசுவது கண்டு பிரமித்து போனேன். ரொம்பநாளாகவே எந்த மேக்கப்பும் இல்லாமல் இயல்பான கெட்டப்பில் நடிக்கவேண்டும் என்கிற ஆசை இருந்தது. அந்த ஆசையை இதில் நிறைவேற்றி வைத்துவிட்டார் ஆனந்த் சங்கர்" என்றார்.

சத்யராஜ் பேசிய வீடியோவிற்கு கீழே கிளிக் செய்யவும் 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரிலீசுக்கு முன்கூட்டியே திரையிடப்படும் வடசென்னை !

Published on 04/10/2018 | Edited on 04/10/2018
danush

 

 

 

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டனில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் 'வட சென்னை'. சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் வரும் அக்டோபர் 17ஆம் தேதி ஆயுதபூஜையை முன்னிட்டு   உலகெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தனுஷ் இன் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து லைக்கா ப்ரொடொக்சன்ஸ் வெளியிடும் இப்படம் தற்போது சீனாவில் அடுத்த மாதம் 11ந் தேதி முதல் 20ந் தேதி வரை நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவான பிங்யாவோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இதில் 3வது நாளில் வடசென்னை திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த திரைப்பட விழாவில் திரையிடப்படும் முதல் தமிழ் படம் 'வடசென்னை' என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

'தேவரகொண்டாவின் திரை ஆளுமை என்னை பிரமிக்கவைத்தது' - பிரபல இசையமைப்பாளர் பிரமிப்பு 

Published on 03/10/2018 | Edited on 03/10/2018
vijay devarakonda

 

விஜய் தேவரகொண்டா, மெஹ்ரீன் பிர்ஸாடா இணைந்து நடித்துள்ள 'நோட்டா' படம் வரும் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.  சத்யராஜ், நாசர், எம் எஸ் பாஸ்கர், பிரியதர்ஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் சார்பாக கே.ஈ ஞானவேல்ராஜா தயாரித்து ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார். 'அருவி' புகழ் ரேமண்ட் டெரிக் கிராஸ்டா படத்தொகுப்பு செய்யும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் குறித்து சாம் சி.எஸ் பேசியபோது... "பல ஆண்டுகளாக நான் ஒரு விஷயத்தை செய்யும் கனவில் இருந்து வந்தேன். இறுதியாக, 'நோட்டா' படத்தின் மூலம் அதை நனவாக்கி இருக்கிறார் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா. 'A RISE OF A LEADER' என்ற பாடலில் சூழல் ஒரு ஆழ்ந்த, சக்தி வாய்ந்த இசையை கோரியது. மாசிடோனியா சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா இருந்தால் படத்தை மிகப்பெரிய அளவில் உயர்த்தும் என்று உணர்ந்தேன். 

 

 

 

ஸ்ட்ரிங்ஸ் மற்றும்  பிராஸ் இசைக்கலைஞர்கள் 150க்கும் மேற்பட்டோர் பின்னணி இசையில், குறிப்பாக இந்த பாடல் இசைக்கோர்ப்பில் பங்கு பெற்றனர். 'நோட்டா' படத்தின் பின்னணி இசை மிக பிரமாண்டமாக இருக்கும். நான் சாதாரணமாக சொல்லவில்லை, படத்தில் உள்ள காட்சிகள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன, அதனால் அவற்றிற்கு பொறுத்தமான இசையை வழங்க, நான் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. மேலும் கதை மற்றும் காட்சிகள் என்னை இன்னும் சிறப்பாக வேலை செய்ய உந்திய அதே நேரத்தில், விஜய் தேவரகொண்டாவின் திரை ஆளுமை என்னை இன்னும் அடுத்த கட்டத்துக்கு தள்ளியது. 'நோட்டா' படம் அவரின் காதல் நாயகன் என்ற முத்திரையை உடைத்து, நெருக்கமான, யதார்த்தமான கதாபாத்திரத்தில் அவரை முன்னிறுத்தியிருகிறது.  இது ஒரு இருமொழி திரைப்படமாக இருப்பதால், இரண்டு மொழி ரசிகர்களுக்கும் ஏற்ற வகையில்  இசையமைக்க வேண்டியிருந்தது. அதை செய்திருக்கிறேன் என நம்புகிறேன்" என்றார்.