sathyaraj talk about perarivalan release

Advertisment

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளன் தன்னை விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் அவரைவிடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவுக்கு பலரும்பாராட்டுகளைதெரிவிப்பதோடு, பேரறிவாளனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில்இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகர்சத்யராஜ், "தம்பி பேரறிவாளன் விடுதலை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அற்புதம் அம்மாள், குயில்தாசன் அய்யா மற்றும் அறிவின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்கிறேன். இந்த விடுதலைக்கு முக்கிய காரணமாகஇருந்த தமிழக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. மேலும் அவரின் விடுதலைக்காக போராடிய அனைத்து கட்சி தலைவருக்கும், தமிழ் உணர்வாளருக்கும், வழக்கறிஞர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நீதிக்கு இது ஒரு போராட்டம், இதை நிச்சயம் உலகம் பாராட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.