Advertisment

“ஸ்லோ மோஷனில் நடந்து, மியூசிக் போடுவாங்க..?” - கேரக்டர் செலக்ஷன் குறித்து சத்யராஜ் ஓபன் டாக்!  

Sathyaraj | Rekha | My Perfect Husband Team Interview

சத்யராஜ் நடிப்பில் முகமது ரசித் தயாரிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்'. இந்த சீரிஸில் சீதா, ரேகா, வர்ஷா பொல்லம்மா, ரக்ஷன், லிவிங்ஸ்டன், அஜீத் காலிக், கிருத்திகா மனோகர், ராகவி மற்றும் ரேஷ்மா பசுபால்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தாமிரா இயக்கியுள்ள இந்த வெப் சீரிஸுக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இந்த சீரிஸ் வருகிற ஆகஸ்ட் 16ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகவுள்ள நிலையில், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக சத்யராஜை சந்தித்தோம். அப்போது அவர் பல்வேறு சுவாரஸ்மான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

Advertisment

புரமோஷனை பொறுத்தவரை தற்போது உள்ள நடிகர்களின் செயல்பாடுகள் மாறியுள்ளது. ஆனால் சீனியர் நடிகராக எந்த ஒரு அலுப்பும்,எதிர்பார்ப்புமின்றி சூட்டுக்கு செல்வது எப்படி?

Advertisment

“முதலில் இருந்தே எனக்கு எதிர்பார்புகள் மிகவும் குறைவாகத்தான் இருக்கும்.எக்‌ஷாம்பிளுக்கு ஒரு தராசில் மகிழ்ச்சியையும் மற்றொரு தராசில் எதிர்பார்ப்பையும் வைத்துக்கொள்ளுங்கள். எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தால் மகிழ்ச்சி இருக்காது. புத்தர் சொன்னதுபோல் ஆசையே துன்பத்திற்கு காரணம். அதற்காக எந்த ஒரு மனுஷனும் ஆசை இல்லாமல் இருக்க முடியாது. ஆனால் ஆசை அதிகமாக சந்தோஷம் அதிகமாகும், இதான் விஷயம்”

மணிவண்ணன் மற்றும் மனோபாலா குறித்து...?

“இவர்கள் எல்லோரும் பாரதிராஜா என்ற ஆலமரத்திற்கு கீழே வருபவர்கள்தான். பாரதிராஜாவின் பாசறை என்று சொன்னால் பாக்கியராஜ், மணிவண்ணன், மனோபாலா, கே.ரங்கராஜ்,எழுத்தாளர் கலைமணி, அன்னக்கிளி செல்வராஜ் என அனைவரும் பாரதிராஜாவுக்கு கீழ் வேலை செய்தவர்கள். இவர்கள் நல்ல டீம், இவர்கள் எழுதும் டயலாக் எல்லாம் பிரமாதமாக இருக்கும்”

என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறியே என்ற டயலாக்போல உங்களுக்கு பிடித்த மாதிரியான கதாபாத்திரத்தை தேர்தெடுக்கும்போது எந்த குறைவும் இல்லாமல் 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' படம் மாதிரி எப்படி செலக்ட் செய்றீங்க?

“முழு திருப்தியாக இருக்கும் என சொல்ல முடியாது. ரொம்ப கணக்கு போட்டு நான் நடிக்க முடியாது. சில சமயம் ஓகே இந்த கேரக்டர் பண்ணுவோம் என்று தோன்றும் அப்படித்தான் அட்லீயின் ராஜா ராணி பட அப்பா கேரக்டரும். ஆனால் அதில் நடித்தது நான் எதிர்பார்த்ததைவிட நல்ல வரவேற்பு கிடைத்தது. இதேபோல் பிரின்ஸ் படத்தில் நடிக்கும்போது சிவகார்த்திகேயன் தான் ஹீரோ, ஆனால் அவரை விட நான் தான்அதிகமாக தொடையைத்தட்டி நடித்தேன். ஆனால் அந்த படம் புஷ்...னு போய்விட்டது. அதனால் ரொம்ப கணக்கு போட முடியாது. ஓரளவுக்கு திருப்தியாக இருந்தால் நடிக்க வேண்டியதுதான். ஆனால் மனதிற்கும் மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட், வீட்டுல விசேஷம் இந்த மாதிரி படங்களில் நடிக்க புடிக்கும். இது போன்ற படங்களில் நடிக்கும்போது விதவிதமான சீன்ஸ் கிடைக்கும். இல்லாவிட்டால் ஸ்லோ மோஷனில் நடந்து வந்துட்டு இருப்போம்... பின்னாடி ஒரு மியூசிக் போடுவாங்க... இதுலயெல்லாம் என்ன இருக்கு?”என்றார்.

interview N Studio sathyaraj
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe