சத்யராஜின் தாயார் காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சத்யராஜ் 40 வருடத்துக்கும் மேலாக திரைத்துறையில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்போதும் ஹீரோவாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் வயது மூப்பு காரணமாகத்தனது 94வது வயதில் உயிரிழந்துள்ளார். கோவையில் அவர் உயிர் பிரிந்த நிலையில், சத்தியராஜ் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் இருக்கிறார். தாயாரின் மறைவு செய்தி அறிந்து கோவை சென்றுள்ளார் சத்யராஜ்.