Sathyaraj Looks Younger With Ai veppan movie update

Advertisment

குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வெப்பன்’. இப்படத்தில்வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தன்யா ஹோப் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். மில்லியன் ஸ்டுடியோ சார்பில் எம்.எஸ். மன்சூர் வழங்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படம் குறித்து இயக்குநர் குகன் சென்னியப்பன் பேசுகையில், "இந்தப் படத்தில் சத்யராஜ் ஒரு சூப்பர் ஹியூமனாக நடித்திருக்கிறார். அவருக்கு பல்வேறு சக்திகள் இருக்கிறது. இந்த சக்திகள் அனைத்தும் அவருக்கு ஆர்ட்டிஃபிஸியலாக கிடைக்கின்றது. இதை வைத்துக்கொண்டு அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதே வெப்பன். சத்யராஜ் இந்தப் படத்தில் ஒரு ஆயுதத்தைப் பயன்படுத்துகிறாரா அல்லது அவரே ஒரு ஆயுதமாகத்திகழ்கிறாரா என்பது இப்படத்தின் ஒன்லைன். அவரை அழிப்பதற்கு இன்னும் இவ்வுலகில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கவில்லை.

எனக்கும் ஹாலிவுட்டில் வரும் மார்வெல், டிசி காமிக்ஸ் போன்று சூப்பர் ஹீரோக்களை உருவாக்கி அவர்களை வைத்துக்கொண்டு ஒரு யூனிவர்ஸ் உருவாக்க வேண்டும் என்று ஒரு ஆசை இருக்கிறது. அதற்கான தொடக்கப் புள்ளியே இந்த வெப்பன் திரைப்படம். இந்தப் படத்திற்காக நாங்கள் மிகவும் மெனக்கெட்டு இருக்கிறோம். அதற்காக சத்யராஜும் மிகவும் மெனக்கெட்டு நடித்திருக்கிறார். நல்ல ஒரு தரத்தில் இப்படத்தை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். சினிமாவில் முதன்முறையாக இப்படத்தின் பிளாஷ்பேக் காட்சியை முழுவதும் ஏஐ மூலம் உருவாக்கி இருக்கிறோம். அதில் சத்யராஜுக்கு எப்படி சூப்பர் பவர்கள் கிடைத்தது மற்றும் அவரின் இளமைத்தோற்றத்தை இந்த ஏஐ மூலம் காண்பித்து இருக்கிறோம்" என்றார்.