vdgds

Advertisment

நடிகர் சூர்யா நடிப்பில், சமீபத்தில் வெளியான படம் 'சூரரைப் போற்று'. கரோனா நெருக்கடி காரணமாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளார். இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், படத்தின் கதாநாயகி குறித்த அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார். இந்நிலையில் தற்போது இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யா, சத்யராஜ் இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.