/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1543.jpg)
ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கிறார். இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வந்தார். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கரோனா பரவல், இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சனைகளால் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டுப் போனது. இதனால் 'இந்தியன் 2' படம் மீண்டும் தொடங்கப்படுமா எனப் பலரும் கேள்வி எழுப்பி வந்தநிலையில் நடிகை காஜல் அகர்வால் செப்டம்பர் 13 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கப்படும் எனத்தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 80 களில் கமல் ஹீரோவாக நடித்த விக்ரம், காக்கி சட்டை படங்களில் சத்யராஜ் வில்லனாக நடித்திருந்த நிலையில் தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்தியன் 2 படத்தில்சத்யராஜூம், கமலும்இணைந்து நடிக்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)