Advertisment

"பிரதாப் போத்தனுக்கு குழந்தை போல மனசு, சிரிச்சுகிட்டே இருப்பார்" - நடிகர் சத்யராஜ்  

sathyaraj Condolences pratap pothen

இயக்குநரும் நடிகருமான பிரதாப் போத்தன்(69) உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த 1979 ஆம் ஆண்டு இயக்குநர்பாலுமகேந்திராஇயக்கத்தில் வெளியான அழியாத கோலங்கள் படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். முதல் படத்தில் பலரது கவனத்தை பெற்ற இவர் மூடுபனி, வறுமையின் சிவப்பு, நெஞ்சத்தைக் கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தமிழைத்தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களையும் சேர்த்து 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் சீவலப்பேரி பாண்டி, ஜீவா, வெற்றி விழாஉள்ளிட்ட தமிழ் படங்களையும் இயக்கியும் உள்ளார்.

Advertisment

இந்நிலையில் நடிகரும், இயக்குநருமானபிரதாப் போத்தன் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின்மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்தவகையில்நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட இரங்கல் பதிவில், "தீவிர இலக்கிய வாசிப்பையும் கலைப் படங்கள் மீதான தணியாத ஆர்வத்தையும் தொடர்ந்தவர் நண்பர் ப்ரதாப் போத்தன். விறுவிறுப்பான திரைப்படங்களை வெற்றிகரமாக இயக்குவதிலும் நிபுணர் என்பதை 'வெற்றிவிழா' காலத்தில் பார்த்திருக்கிறேன். அவருக்கென் அஞ்சலி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்று சத்யராஜ் வெளியிட்ட இரங்கல் வீடியோவில், "ஆரூயிர்நண்பன், மிக சிறந்த இயக்குநர், அற்புதமான நடிகர் பிரதாப் போத்தன் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்து கொள்கிறேன். அவருடைய இயக்கத்தில் ஜீவா, மகுடம் ஆகிய இரு படங்களில் நடித்ததால்நல்ல பெயர் கிடைத்தது. குழந்தை போல மனசு, அவருடன் இருந்தால் பொழுது போவதேதெரியாது, எப்போதும் சிரிச்சுகிட்டேஇருப்பார்.ஆனால் திடீரென அவர் இறந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது" என்று கூறியுள்ளார்.

tamil cinema sathyaraj ACTOR KAMAL HASSHAN
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe