'விவசாய நிலங்களை அழித்து சாலை அமைப்பவர்களுக்கு படத்தை காட்ட வேண்டும்' - சத்யராஜ் 

sathyaraj

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது இதில் தயாரிப்பாளர் சூர்யா, நடிகர் கார்த்தி, 2D ராஜ் சேகர் பாண்டியன், நடிகர்கள் சத்யராஜ், பொன்வண்ணன், சரவணன், சூரி, மாரிமுத்து, இளவரசு, ஸ்ரீமண், மனோஜ் குமார், நாயகி சயீஷா, பிரியா பவானி ஷங்கர், அர்த்தனா பினு, பானு ப்ரியா, மௌனிகா, ஜீவிதா, இந்துமதி, கலை இயக்குனர் வீர சமர், எடிட்டர் ரூபன், இசையமைப்பாளர் டி. இமான் உள்ளிட்ட படக்குழுவுவினர் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியபோது... "இந்த படத்தை முதலில் மக்கள் மீது அக்கரைக்கொண்டு நாட்டை பாதுக்காக்கிறோம் என்றும், சொகுசாக தாங்கள் செல்ல விவசாய நிலங்களை அழித்து, மரங்களை வெட்டி சாலை அமைக்கும் குழுக்களுக்கு படத்தை முதலில் போட்டு காட்ட வேண்டும். இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் 2D நிறுவனம் விவசாயிகளுக்கு உதவியுள்ளது தான். படத்தில் நாங்கள் அனைவரும் ஒருவருக்குஒருவர் போட்டி போட்டு நடித்தோம். படத்தில் எல்லோருக்கும் நன்றாக நடிக்க ஸ்கோப் இருந்தது. நான் முதலிலிருந்து கூறியது போலவே இப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதுள்ளது" என்றார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

karthi kadaikuttysingam
இதையும் படியுங்கள்
Subscribe