Published on 05/03/2018 | Edited on 05/03/2018
![sathyaraj](http://image.nakkheeran.in/cdn/farfuture/SuCeVdixo_19Kv_g0EAT-jzM5kXTO4ryQneSyPXYlok/1533347618/sites/default/files/inline-images/201803051201542342_1_Kaaliyan-Sathyaraj2._L_styvpf.jpg)
கடந்த ஆண்டு வெளியான 'விமானம்' படத்தை தொடர்ந்து தற்போது 'காளியன்' என்கிற பிரமாண்டமான சரித்திர படத்தில் நடித்து வருகிறார் நடிகர் பிரித்விராஜ். இது 300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குஞ்சிர கோட்டு காளி என்ற திறமையான படை வீரனின் கதை. இதில் ரவிக்குட்டிபிள்ளை என்ற முக்கியமான வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார். 'கண்ணாமூச்சி ஏனடா' படத்தில் பிரித்விராஜுடன் சேர்ந்து நடித்த சத்யராஜ் தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அவருடன் சேர்ந்து நடிக்கிறார். பாகுபலி’ படத்தில் சத்யராஜின் கட்டப்பா கதாபாத்திரம் நன்றாக பேசப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இது போல் ஒரு சரித்திர படத்தில் சத்யராஜ் நடிப்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.