“வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ்” - பிரதமர் பயோபிக் குறித்த கேள்விக்கு சத்யராஜ் பதில்

sathyaraj about pm modi bio pic

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் மழை பிடிக்காத மனிதன். இதில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்திருக்க பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா, பிரித்வி, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடலுக்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையைக் கவனிக்கிறார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இதையொட்டி டீசர் வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். பின்பு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

அப்போது சத்யராஜிடம், ரஜினியுடன் கூலி படத்தில் நடிக்கிறீர்களா?பாலிவுட்டில் சல்மான் கான் படத்தில் வில்லனாக நடிக்கிறீர்களா? பிரதமர் மோடியின் பயோ-பிக்கில் நடிக்கிறீர்களா? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இன்றைக்கு இருக்கிற கார்ப்பரேட் கம்பெனிகளில் ஒவ்வொரு அறிவிப்பையும் அவர்கள் தான் அறிவிக்க வேண்டும். அதற்கு முன்னாடி நான் சொல்லிடக் கூடாது என்பது ஒப்பந்தம். அதனால்தான் இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. கூலி படத்தில் ரஜினியுடன் நடிக்கிறேன். அதன் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மற்ற கேள்விகளுக்கு அவர்கள்தான் பதிலளிக்க வேண்டும். ஒப்பந்தத்தை மீறி பதில் சொன்னால் நம் மேல் வழக்கு கூட போட்டுவிடுவார்கள்.

மோடி பயோ பிக்கில் நடிக்க யாரும் என்னிடம் கேட்கவில்லை. அப்படியே நடித்தாலும், என்னுடைய நண்பன் மணிவன்னன் போல ஒரு டைரக்டர் எடுத்தால் தத்ரூபமாக இருக்கும். இல்ல விஜய் மில்டன் அப்படியே எடுக்கலாம் என்றாலும் ஓகே. வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் மோடி பயோ பிக் எடுத்தால் நல்லாயிருக்கும் என நினைக்கிறேன்” என்றார்.

Narendra Modi sathyaraj
இதையும் படியுங்கள்
Subscribe