Advertisment

சத்யம் திரையரங்கம் செய்த சமூக சேவை 

sathyam

பெண்களின் தலையாய பிரச்சனையான மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களை கண்டுபிடித்தவர் தமிழகத்தை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம். இவருடைய வாழ்க்கையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட ஹிந்தி திரைப்படம் ‘பேட் மேன்’. சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தில் அக்‌ஷய் குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே ஆகியோர் நடிக்க, பிரபல இயக்குனர் ஆர்.பால்கி இயக்கியுள்ளார். இந்நிலையில் ‘பேட் மேன்’ படத்தை காண திரையரங்கத்திற்கு வரும் பெண்களுக்கு திடீரென ஏற்படும் அசௌகரியத்தை உணராமல் இருக்க சென்னை எஸ்பிஐ சினிமாஸ், மற்றும் சத்யம் திரையரங்கில் இலவசமாக நாப்கின் வழங்கும் இயந்திரத்தை பொருத்தியுள்ளது. விரைவில் தங்களுடைய அனைத்து திரையரங்குகளிலும் இத்தகைய வசதி ஏற்படுத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மாதவிடாய் காலங்களில் பெண்கள் படும் அவஸ்தைக்கு வெளி இடங்களில் முற்று புள்ளி வைக்க இது முதல் படியாக அமைந்துள்ளது.

Advertisment
sathyamcinemas napkin padman akshyakumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe