sathuranga vettai 2 movie release date announced

கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் வெளியான 'சதுரங்க வேட்டை' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்துஇயக்குநர்எச் வினோத் எழுத்தில் நிர்மல் குமார் நடிகர் அரவிந்த் சாமியை வைத்து 'சதுரங்க வேட்டை 2' படத்தை இயக்கினார். த்ரிஷா, நாசர், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை நடிகர் மனோபாலா தயாரித்திருந்தார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="2807b5cd-6c43-4c83-b609-550c5e82b2a1" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/ik-ad%20%281%29_17.jpg" />

Advertisment

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரேபடத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் தயாரிப்பாளர் தரப்பிற்கும், அரவிந்த சாமிக்கும்இடையே சம்பளப் பாக்கி தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படத்தின் ரிலீஸ் தடைபட்டு போனது. நீதிமன்றம் வரை சென்றஇவ்விவகாரம் தற்போது முடிவுக்கு வந்திருப்பதால் படத்தின் ரிலீஸ் குறித்தஅறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'சதுரங்க வேட்டை 2' அடுத்தாண்டு ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.