24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த 'சத்ரு'!

kathir

ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகு குமார் என்கிற ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் 'சத்ரு'. கதிர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மேலும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி, பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா, வில்லனாக லகுபரன் மற்றும் பலர் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை நவீன் நஞ்சுண்டான் இயக்கியுள்ளார். மேலும் இப்படம் குறித்து இயக்குனர் நவீன் பேசும்போது...

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

"இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம் இது. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் கதை. விறு விறுப்பான திரைக்கதை கொண்ட படமாக உருவாகியுள்ளது. மேலும் ஆக்‌ஷன், ரொமான்ஸ் கலந்த படம். இந்த படத்தைப் பார்த்த மைல்ஸ்டோன் மூவிஸ் ஜி.டில்லிபாபு சார் படத்தை ரிலீஸ் செய்கிறார். தரமான படங்களான மரகத நாணயம், ராட்சசன் என பார்த்து பார்த்து தயாரிக்கும் டில்லிபாபு 'சத்ரு' படத்தை வெளியிடுகிறார் என்றால் அது எங்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம். குற்றவாளிகளாக யார் கண்ணுக்கும் தெறியாமல் வாழும் வில்லன்கள் ஐந்து பேரையும் துணிச்சல் மிக்க ஒரு போலிஸ் அதிகாரி எப்படி மடக்கி பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார் என்பது தான் சத்ரு. 24 மணி நேரத்தில் நடக்கும் திரில்லர் ஆக்‌ஷன் படம். படம் மார்ச் 1ம் தேதி திரைக்கு வர உள்ளது" என்றார்.

kathir Srushti Dange Sathru
இதையும் படியுங்கள்
Subscribe