தமிழின் முக்கிய படைப்பாளிகளாலும்; கமர்சியல் பாதையிலிருந்து விலகி சற்றே வித்தியாசமான திரைப்படங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்களாலும் பாராட்டு பெற்ற படம் ‘ஒரு கிடாயின் கருணை மனு’. இப்படத்தின் இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் அடுத்தடுத்த படைப்புகள் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் வெளிவர உள்ள படம் ‘சத்திய சோதனை’. பிரேம்ஜி அமரன் நடித்துள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராகஆர்.வி.சரண்,படத்தொகுப்பாளராகவெங்கட்ராஜன்ஆகியோர் தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்கிறார்கள். இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வேல்முருகன் எழுதியுள்ளார். இசைப்பணியை ரகுராம் செய்துள்ளார்.
காவல்நிலையத்தில் மாட்டிக் கொள்ளும் பிரேம்ஜி அமரனின் கஷ்டங்களைச் சொல்வதாக இதன் டீசர் அமைந்துள்ளது. முதல் படத்தின்வழியாக சுவாரசியமாக கதை சொல்லி ரசிகர்களை கட்டிப்போட்ட இயக்குநர் இப்படத்தின் வழியாகவும் சுவாரசியமாக கதை சொல்லி ரசிகர்களை ஈர்ப்பார், படம்திரையரங்கிலும் வெற்றிகரமாக ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.