sathish team sattam en kayil movie apology to ghost

இயக்குநர் சாச்சி இயக்கத்தில் சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சட்டம் என் கையில்’. ஷண்முகம் கிரியேஷன் தயாரித்துள்ள இப்படத்தில் அஜய் ராஜ், பாவல் நவகீதன், மைம் கோபி, ரித்திகா, கே.பி.ஒய் சதீஷ், வித்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ள இப்படம் ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.

Advertisment

இப்படம் வருகிற 20ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள நிலையில் நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக படக்குழுவை சந்தித்தோம். அப்போது இயக்குநர் சாச்சி, சதீஷ், அஜய் ராஜ் மற்றும் கே.பி.ஒய் சதீஷ் ஆகியோர் படம் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்தனர். மேலும் தங்களுக்கு நடந்த திகிலூட்டும் சம்பவங்களை கூறினர்.

Advertisment

அப்போது இயக்குநர் சாச்சி, “எல்லா பேய்களுக்கும் வேலை வெட்டியே இருக்காது போல. எல்லா நேரமும் கதவை தட்டனும்... பயமுறுத்தனும்... இதையே ஒரு வேலையா பண்ணிக்கிட்டு இருக்கு” என கலாய்த்தபடி பேசினார். குறுக்கிட்ட சதீஷ், “நீங்க பேய் இனத்த கேவலப்படுத்தாதீங்க. தமிழ் சினிமாவ காப்பாத்துனதுல பேயுடைய பங்கு நிறைய இருக்கு. நம்ம படத்துக்கும் பேயை யூஸ் பண்ணியிருக்கோம். அதனால் பேய்களிடம் மன்னிப்பு கேளுங்க” என கிண்டலடித்தார். உடனே சாச்சி மன்னிப்பு கேட்டார்.